விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 65 வயதான ஸ்வீடன் பிரஜைக்கு 26,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவலவினால் இன்று (24) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேற்படி, அபராதத்தை செலுத்த தவறினால், ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டார்.
ஸ்வீடன் பிரஜையான தனது கட்சிக்காரர் சம்பவம் நடந்தபோது குடிபோதையில் இருந்ததாகவும், குற்றம் செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த சட்டத்தரணி, சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் கூறினார்.
அதற்கமைய, பிரதிவாதியான ஸ்வீடன் பிரஜைக்கு 26,500 ரூபா அபராதம் விதித்த நீதவான், குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டார்.