அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் பென்சகோலாவில் வசிக்கும் ஃபேரெல்லி என்ற இளைஞர், 30 வயதுக்குள் தனது நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார்.
2020-ஆம் ஆண்டு, கொரொனா காலத்தில் வீட்டுக்கு செவிலியர்களை அனுப்பி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ரீவைடலைஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கிய அவர், 2023-ஆம் ஆண்டு தனது 28-ஆவது வயதில் 106 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.
தற்போது 120 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், பங்குகள், ரியல் எஸ்டேட், கிரிப்டோ கரன்சிகளில் கணிசமான பணத்தை முதலீடு செய்து, மாதம் சுமார் 26 லட்சம் ரூபாய் வட்டி வருமானத்துடன் அவர் தனது ஓய்வுக்காலத்தை கழித்து வருகிறார்.