வேலூர் காட்பாடியில் நடத்தை சந்தேகத்தால் மின்சாரம் பாய்ச்சி மனைவியை 3-வது முறையாக கொலை செய்ய முயன்றதாக கணவன் கைது செய்யப்பட்டார்.
எல்.ஜி.புதூரை சேர்ந்த மோட்டார் மெக்கானிக் முருகனின் மனைவி அன்பழகி மின்சாரம் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், வீட்டின் இரும்பு கேட்டில் மின்வயரை பொருத்தி தரையில் தண்ணீரை ஊற்றிவிட்டு முருகன் சுவிட்ச் ஆன் செய்து விட்டு அழைத்ததால் கதவை திறந்த அன்பழகி மீது மின்சாரம் பாய்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.