இந்த ஆண்டு தொடங்கிய போது தமிழ் சினிமாவில் மிகவும் பேசு பொருளானவர் என்றால் அது விஷால் தான். இவரது மத கஜ ராஜா படத்தின் புரோமோஷனுக்காக கலந்து கொண்டபோது, இவரது நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
குறிப்பாக, இவரது கைகள் மிகவும் நடுங்கியதாலும், பேசுவதற்கே மிகவும் சிரமப் பட்டதாலுமே பலரும் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான போது, நடிகர் சங்கத்திற்கு என தனி கட்டிடம் கட்டிவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்தார். அதேபோல் நடிகர் ஆர்யாவும் அறிவித்தார். ஆனால் ஆர்யா, கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை உள்ளது.
இந்நிலையில்தான் பலரும் விஷால் எப்போதுதான் திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியை முன் வைத்து வந்தனர். மேலும் நடிகர் சங்க கட்டிடத்தைக் கூட பின்னர் கட்டிக் கொள்ளலாம். ரொம்பவும் வயசு ஆவதற்கு முன்னர் கல்யாணத்தை செய்யச் சொல்லுங்க எனக் கூறுபவர்களும் உள்ளார்கள் இப்படியான நிலையில்தான் நடிகர் விஷால் தான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ” கார்த்தி பார்த்துட்டு இருக்கான். இன்னும் நான்கு மாசத்துல நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா இருக்கும். அதற்கான வேலையில் கார்த்தி ரொம்பவும் தீவிரமா இறங்கியிருக்கான்.
அதற்கு அப்புறம் எல்லாம் நல்லதா நடக்கும். நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா பத்திரிக்கையோட சீக்கிரமே வரேன். நடிகர் சங்க கட்டிடத்தை நாங்கள் திரையுலகின் கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு இடமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
நாள்தோறும் நடிகர் சங்கத்தில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். முதல் நாள் நாசர் சார் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் என்றால், மறுநாள் பசுபதி சார் விருமாண்டி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்து கொள்வார். அதைப் பார்க்க திரைத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட்டு வருகிறோம்” என பேசியுள்ளார்.