மாஸ்கோ அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவத்தின் மூத்த ஜெனரல்களில் ஒருவரான யுராஸ்லவ் மொகாலிக் கொல்லப்பட்டார்.
வீட்டருகே அவர் நடந்து செல்லும் பாதையில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை முன்கூட்டியே நிறுத்திவிட்டு, ரிமோட் மூலம் அதை சிலர் வெடிக்கச் செய்துள்ளனர்.
ரஷ்ய அரசு சார்பில் பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர் யுராஸ்லவ் மொகாலிக். உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்பின் உயர்மட்டக் குழு அதிகாரிகள் புடினை சந்தித்து பேச இருந்த நிலையில், மொகாலிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது.