இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.
குறித்த போட்டியானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.