சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாண்டா கரடி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பராமரிக்கப்படும் தாய் பாண்டா கரடி, தனது குட்டிகளுடன் விளையாடும் மனதைக் கவரும் வீடியோ வெளியிடப்பட்டது.
அதில் திறந்த இடத்தில் விளையாடிய குட்டியை, தாய் பாண்டா, தனது வாயால் கவ்வி, கூண்டுக்குள் உள்ளே கொண்டு செல்கிறது.
கூண்டுக்கு வெளியே மூங்கில் தளிர்களை குட்டி பாண்டா கரடிகள் தின்றபோது உள்ளே இருந்து வெளியே வந்த தாய் பாண்டா, குட்டி ஒன்றிடம் இருந்து மூங்கில் தளிரை பிடுங்கி உண்ணும் காட்சி வெளியிடப்பட்டது.