Monday, May 12, 2025
HomeMain NewsOther Countryஎல்லையை கடக்க முயன்ற 54 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

எல்லையை கடக்க முயன்ற 54 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 54 “பயங்கரவாதிகளை” சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் அருகே நடந்தது. அங்கு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் எல்லைக்குள் நேற்று இரவு ஊடுருவினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், 54 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்லப்பட்டவர்கள் “குவாரிஜ்” என்று உளவுத்துறை அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு அறிக்கை கூறுகிறது, இந்த சொல் பாகிஸ்தான் தலீபான்களை விவரிக்க பாகிஸ்தான் கூட்டாட்சி அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments