Thursday, May 15, 2025
HomeSportsஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக புவனேஷ்வர் குமார்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

இப்போட்டியில் பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பியூஸ் சாவ்லாவை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடம் பிடித்தார்.

புவனேஷ்வர் குமார் இதுவரை 185 போட்டிகளில் விளையாடி 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் 214 விக்கெட்டுகளுடன் சாஹல் முதல் இடத்தில உள்ளார்.

குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள ஒரே வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments