சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
இன்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மீட்புப்பணிகளுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உணவக தீ விபத்து, இந்த மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து. முன்னதாக, வடக்கு சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.