மேற்கு இலண்டனில் உள்ள துணை மின்நிலையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Maida Vale உள்ள Aberdeen Place என்ற இடத்தில் சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அருகில் இருந்த கட்டிடத்தின் கூரையும் எரிந்ததாக இலண்டன் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சுமார் 80 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ல் தீ விபத்து குறித்து 170க்கும் மேற்பட்ட அழைப்புகள் தீயணைப்புப் படையினருக்கு வந்த நிலையில், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இதனையடுத்து, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், முடிந்தவரை அந்தப் பகுதியை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.