Friday, May 23, 2025
HomeMain NewsIndiaஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) புதன்கிழமை (07) ஒன்பது தளங்களைத் தாக்கி இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்தபோது, ​​அந்தத் திட்டத்திற்கு – ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது.

சிந்தூர் அல்லது குங்குமம் என்பது திருமணமான இந்துப் பெண்களின் அடையாளமாகும்.

மேலும் ஏப்ரல் 22 அன்று பஹல்காம் படுகொலையைக் குறிக்கிறது.

அதில் புதிதாகத் திருமணமானவர்கள் உட்பட ஆண்கள் தங்கள் மதத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

போர் வீரர்களால் ஒரு சிந்தூர் திலகமும் பெருமையுடன் அணியப்படுகிறது.

எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்த முதல் அறிவிப்பில், இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரை காட்சிப்படுத்த ஒரு படத்தைப் பயன்படுத்தியது.

துல்லியமான வெடிமருந்துகளைப் பயன்படுத்தி அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், இராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை (IAF) ஆகிய முப்படைகளால் ஒருங்கிணைக்கப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் POK இல் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கின.

“சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கின.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியது.

அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன.

மொத்தம் ஒன்பது தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன என்று இந்திய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள், பைசரனில் உள்ள புல்வெளியில், இந்து ஆண்களைத் தனிமைப்படுத்தி, மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர்.

பஹல்காமில் உள்ள இந்த இடத்திற்கு தேனிலவு பயணிகள் அடிக்கடி வருகிறார்கள்.

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் கணவன்களை இழந்த பெண்களை மனதில் கொண்டு, பதிலடி கொடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று குறியீட்டுப் பெயரை வைத்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி நர்வால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஷான்யா திவேதி, குஜராத்தைச் சேர்ந்த ஷிதல் கலாதியா, காஜல்பென் பர்மர், கொல்கத்தாவைச் சேர்ந்த சோஹினி அதிகாரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரகதி ஜக்டேல், கேரளாவைச் சேர்ந்த ஷீலா ராமச்சந்திரன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெனிபர் நதானியேல், ஜெயா மிஸ்ரா ஆகியோரின் கணவர்கள் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

தாக்குதலின் பின்னர் திருமணமாகி ஆறு நாட்களே ஆன ஹிமான்ஷி நர்வால், தனது கணவர் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு அருகில் மண்டியிட்டார்.

அவர்தான் இந்த துயரத்தின் முகமாக மாறினார்.

சில நாட்களுக்குப் பின்னர், ஹிமான்ஷி தனது கணவருக்கு அஞ்சலி செலுத்தத் தோன்றினார், ஆனால் திருமணமான இந்துப் பெண்களின் நெற்றியில் பிரகாசிக்கும் குங்குமம் இல்லாமல்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments