வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பல தமிழ் கட்சிகள் வெற்றிப்பெற்று ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
இதனடிப்படையில் யாழ்மாநகரசபையை ஆட்சியமைப்பது யார் என்ற கேள்வியெழும்பியுள்ளது. ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பாண்மையை யாரும் பெறவில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 12 ஆசனங்களை பெற்றுள்ளது, இலங்கை தமிழரசுக்கட்சி போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 13 ஆசனங்களை பெற்றுள்ளது.
எனவே இந்த இரு கட்சிகளுமே அறுதிப்பெரும்பாண்மை பெறாத நிலையில் ஆட்சியமைப்பதானால் ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர வேண்டும்.
சுமந்திரனும், கஜேந்திரமகுமார் பொன்னம்பலமும் சேர்ந்து ஆட்சியமைப்பது அசாத்தியமானது.