Thursday, May 22, 2025
HomeGossipsஅந்த வலி இப்ப புரியுது, நான் செய்தது பெரிய தவறு.. நடிகை தேவயானி உடைத்த ரகசியம்

அந்த வலி இப்ப புரியுது, நான் செய்தது பெரிய தவறு.. நடிகை தேவயானி உடைத்த ரகசியம்

தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தேவயானி.

அடுத்த வருடமே அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்த காதல் கோட்டை திரைப்படம் அவரின் திரைப்பயணத்திற்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது.

இவர், சரத்குமார் ஜோடியாக விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும் போது அப்பட இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட அவரை குடும்பத்தை எதிர்த்து திருமணமும் செய்துகொண்டார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” என் வாழ்க்கையில் என் அம்மாவை மீறி நான் செய்த ஒரே ஒரு விஷயம் என் திருமணம் தான். நாளடைவில் அது சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், அது சரியாகவே இல்லை.

என் முதல் குழந்தை பிறந்த போது கூட அம்மா என்னை வந்து பார்க்கவே இல்லை. அது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது.

இரண்டாவது குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து தான் என்னுடைய அம்மாவை பார்த்தேன். நான் அம்மா ஆன பின் தான் எனக்கு அது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது. எல்லாம் என் தலையில் எழுதி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments