ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 29 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், ஃபால்கன்-9 ராக்கெட் மூலம், ஸ்டார் வார்ஸ் நாளான மே 4-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
அவை அனைத்தும் தாழ் புவிசுற்றப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்ற ஃபால்கன்-9 ராக்கெட்டின் பூஸ்டர், அட்லாண்டிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மீட்புக் கப்பலில் பத்திரமாகத் தரையிறங்கியது.
ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது இதுவே முதன்முறை என்றும், தொலைதூர பகுதிகளுக்கு அதிவேக இணையத் தொடர்பு வழங்குவதற்காக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.