தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
இன்று (08) பாராளுமன்றத்தில், வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மின்சாரக் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினார்.
இருப்பினும், அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்த விடயத்தில் சரியான கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.