Saturday, May 24, 2025
HomeMain NewsSri Lanka7 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம்.. ஆரம்பமாகும் விசாரணை

7 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம்.. ஆரம்பமாகும் விசாரணை

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

பசறை, உடகம பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி, உயிரிழப்பதற்கு முன்னர் ஒரு வார காலமாக காய்ச்சல் மற்றும் சளி காரணமாக பல தடவைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

எனினும், சிறுமியின் உடலில் காயங்களின் தழும்புகள் இருப்பதாக பசறை வைத்தியசாலையில் சிறுமியை பரிசோதித்த வைத்தியர் தெரிவித்துள்ளதால், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பசறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments