Friday, May 23, 2025
HomeMain NewsSri Lankaவிபத்திற்குள்ளான ஹெலிகொப்டரை மீட்க நடவடிக்கை

விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரை மீட்க நடவடிக்கை

மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டரை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த ஹெலிகொப்டர் நேற்றைய தினம் அவசரமாக தரையிறங்கும்போது மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் விமானப்படை ஹெலிகொப்டர் வீரர்கள் இருவரும், இராணுவ விசேடப் படை வீரர்கள் நால்வரும் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், ஹெலிகொப்டரில் 12 இராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், ஏனைய 6 இராணுவ வீரர்களும் சிகிச்சைகளுக்காக அரலங்காவில மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாதுறுஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் விசேட படையினரின் கலையும் அணிவகுப்பைக் காண்பிப்பதற்காக, அன்று காலை சுமார் 6.44 மணியளவில் ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகொப்டர் புறப்பட்டது.

அந்த ஹெலிகொப்டரில் 12 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் திடீரென ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவசரமாக தரையிறக்க முயற்சிக்கப்பட்ட போது ஹெலிகொப்டர் மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

பின்னர் விமானப்படை மற்றும் இராணுவ வீரர்களும் துரிதமாக செயற்பட்டு விபத்திற்குள்ளானவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

படகில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு அரலகங்வில பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் 08 பேரை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் அவர்களில் 06 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் நான்கு இராணுவ விசேடப் படை வீரர்களும், இரண்டு விமானப்படை வீரர்களும் பலியாகினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments