பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்குத் தடை
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவாமி லீக் கட்சி மீதான விசாரணை முடியும் வரை தடை அமலில் இருக்கும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவாமி லீக் கட்சி தடை செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.