திபெத் நாட்டில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 2.41 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நில அதிர்வில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.