இந்த நடிகர் ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தார். இவரைப் போன்ற ஒரு காதலர், கணவர் கிடைத்தால் போதுமே என்று ஏங்கிய லட்சக்கணக்கான ரசிகைகள் உள்ளார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகரின் அட்ராசிட்டி ரொம்பவும் ஓவராக போய்க்கொண்டு உள்ளது. இதனால் ரசிகைகள் பலரும் இந்த மாதிரி காதலனோ, கணவனோ தனக்கு வரக்கூடாது என்று பேசிக்கொண்டு உள்ளனர்.
இந்த நடிகருக்கு நடந்தது காதல் திருமணம் தான். ரொம்பவும் ஜாலியாகத்தான் வாழ்ந்து வந்தார். திருமண வாழ்க்கையும் ரொம்பவும் சிறப்பாகத்தான் சென்று கொண்டு இருந்தது. இவருக்கும் இவரது காதல் மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் பிரிய போகிறார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் மெல்ல மெல்ல வெளியே வந்த விஷயம் தான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது நடிகர், அவரது மனம் கவர்ந்த பெண் தோழி ஒருவரைப் பார்த்து விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. அவருடன் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனைக் கண்டுபிடித்த மனைவி, இது தொடர்பாக நடிகரை நடு வீட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்ட பின்னர்தான், இருவருக்கும் இடையில் பிரச்னை ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது.
மனைவி நாளுக்கு நாள் இந்த விஷயத்தை கேட்டுக் கொண்டே இருந்ததால் இருவருக்கும் இடையில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்துள்ளது. நடிகர் ஒரு கட்டத்திற்கு மேல் மனம் கவர்ந்த தோழியே கதி எனக் கிறங்கிக் கிடந்துள்ளார். நடிகரின் நடவடிக்கைகளால் மனம் நொந்த அவரது மனைவி, அதன் பின்னர், நடிகரைப் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்தாராம். இருவரும் பிரிந்த பின்னர் அவர்கள் பிரிவு தொடர்பாகவும் நடிகரின் மனம் கவர்ந்த தோழி குறித்தும் பல தகவல்கள் வெளிவந்தது. இது அவரது ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
நடிகரோ, தனது மனம் கவர்ந்த தோழி குறித்து எப்படி வெளியே தெரிந்தது? யார் மூலமாக இது வெளியே போனது என மிகவும் யோசித்தாராம். ஆனால் விஷயம் எப்படியோ வெளியானதால், தானும் தனது மனம் கவர்ந்த தோழியும் இணைந்து தொழில் தொடங்க உள்ளோம். எங்களை அப்படி இப்படி பேசாதீர்கள் என்று மனம் கவர்ந்த தோழிக்காக பேசினார்.
இப்படி இருக்கும்போது சமீபத்தில் நடைபெற்ற விழாவில் நடிகரும் நடிகரின் மனம் கவர்ந்த தோழியும் புது மாப்பிள்ளை புது மணப்பெண் போன்று உடை உடுத்திக் கொண்டு வந்துள்ளார்கள். இதனைப் பார்த்த திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இந்த நடிகரை நல்லவரு நெனச்சது தப்பா போச்சு என பேசிக் கொண்டு இருக்கிறார்களாம்.
இந்த நடிகர் மனைவியை கழட்டி விட்டுட்டு மனம் கவர்ந்த தோழியுடன் சேர்ந்து கொண்டு ஓவர் ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார். இவரது நடவடிக்கைகளை பார்த்தால் ஏதோ இரண்டு பிள்ளை பெத்த தகப்பன் போலவா நடந்து கொள்கிறார்? ஏதோ, புது மாப்பிள்ளை மாதிரி நடவடிக்கைகள் இருக்கு என்று பேசி வருகிறார்கள். நடிகர் இந்த ஆட்டம் எத்தனை நாளைக்கோ?