விவாகரத்து ஹீரோவை வைத்து பெரிய பட்ஜெட்டில் பல வருடங்களாக ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் அந்த பாப்புலர் தயாரிப்பாளர் சமீபத்தில் ஒரு திருமண ஏற்பாடை செய்து அதற்கு நடிகரையும் ஒரு பேச்சுக்கு வாங்க என அழைத்துள்ளார். ஏகப்பட்ட உச்ச நட்சத்திரங்களை அழைக்க நம்ம வீட்டுக் கல்யாணப் பேச்சு தான் அடுத்த ஒரு வாரத்துக்கு இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு அந்த ஹீரோ மொத்தமாக சோலியை முடித்து விடும் அளவுக்கு ஒரு காரியத்தை பண்ண தயாரிப்பாளர் கடுப்பாகி தலைவலியுடன் சுற்றி வருகிறார் என்கின்றனர்.
பெரிய பட்ஜெட்டில் நம்பர் நடிகையை வைத்து அந்த தயாரிப்பாளர் படம் பண்ணி வரும் நிலையில், திருமணத்துக்கு கூட அம்மணியால் வரமுடியவில்லை என்று வந்த போன் காலே தயாரிப்பாளரை ஏற்கனவே அப்செட் ஆக்கிய நிலையில், நடிகரின் செயல் மேலும், பெட்ரோலை ஊற்றி விட்டதாக கூறுகின்றனர்.
சோலோவாக ஹிட் கொடுக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பி வரும் விவாகரத்து நடிகர் அடுத்த திருமணத்துக்கு அவசர அவசரமாக ரெடியாகி வருவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு எப்படித்தான் அடுத்த பெண்ணை தேடி செல்ல சில சினிமா பிரபலங்களுக்கு மனசு வருகிறது என்றே தெரியவில்லை என பலரும் அந்த நடிகரை விளாசி வருகின்றனர். மறைமுகமாக இத்தனை நாட்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நடிகர் தற்போது எல்லாருக்கும் தெரியட்டுமே என்கிற மன நிலைக்கு வந்ததை பார்த்து பத்ரகாளியாகவே நடிகரின் மனைவி ஆகி சாபம் விடாத குறையாக மறைமுகமாக சாபத்தை அள்ளி வீசி இருப்பதை பார்த்து பலரும் ஷாக் ஆகிவிட்டனர். குறிப்பாக நடிகரை வைத்து பல கோடி முதலீடு போட்டு படம் எடுத்து வரும் அந்த தயாரிப்பாளர் ஆடிப்போயுள்ளாராம்.
கோடிக் கணக்கில் செலவு செய்து குடும்ப விழாவை பிரம்மாண்டமாக பல உச்ச நடிகர்களை அழைத்து ஒரே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி ஒட்டுமொத்த மீடியா வெளிச்சத்தையும் தான் அடையலாம் என நினைத்த தயாரிப்பாளருக்கு விவாகரத்து ஹீரோ பார்த்த வேலையால் ஒட்டுமொத்த மீடியா வெளிச்சமும் அவர் பின்னாடி போய்விட்டதை எண்ணி கடுப்பாகி விட்டாராம்.
அதையும் தாண்டி நடிகரின் மனைவி விட்ட சாபத்தை அறிந்தும் தயாரிப்பாளருக்கு சந்தோஷமே மொத்தமாக போய்விட்டது என்கின்றனர். ஏற்கனவே நடிகர் நடித்து வரும் படங்கள் எல்லாம் சொதப்பி வரும் நிலையில், அடுத்த படமாவது தேறுமா என்று தெரியவில்லையே என்றும் புலம்பி வருகிறாராம். தொடர்ந்து நஷ்டம்: ஏற்கனவே அந்த தயாரிப்பாளர் கோடிக் கணக்கில் கொட்டி எடுத்த பல படங்கள் சொதப்பி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களும் சொதப்பி விடுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நம்பர் நடிகையின் படத்தையும் அந்த காமெடி இயக்குநர் இயக்கி வரும் நிலையில், சமீபத்தில் அவரது படத்துக்கும் ஃபிளாப் போர்டு மாட்டப்பட்ட நிலையில், அந்த படமும் என்ன ஆகும் என்கிற அச்சம் அதிகமாகவே உள்ளதாக கூறுகின்றனர். எல்லாத்துக்கும் மேலாக நடிகரின் மீதுதான் ரொம்பவே கோபத்தில் இருக்கிறார் என்கின்றனர். படப்பிடிப்பில் இது சீக்கிரமே எதிரொலிக்கும் என்கின்றனர்.