மொபல் போன்களின் பிரியர்களுக்காக நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பலவிதமான மாடல்களில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பீரியா 1 VII-ஐ வருகிற 15-ந்தேதி அறிமுகப்படுத்துகிறது.
சோனி எக்ஸ்பீரியா 1 VII கருப்பு, பச்சை மற்றும் ஊதா என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த மாடலில் பெரிய டிஸ்ப்ளே உள்ளது. மேலும் செல்ஃபி கேமரா மேல்பக்க பெசலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
மேலும், சோனியின் பிராவியா தொழில்நுட்பத்துடன் கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் 5,000mAh பேட்டரி இருக்கும் என்றும் இரண்டு நாட்கள் வரை பேட்டரி சார்ஜ் வழங்கும் என கூறுகின்றனர்.