பிலிப்பைன்ஸில் இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அந்நாட்டு நேரப்படி மாலை 7 மணிக்கு நிறைவடைந்துள்ளன.
வாக்கு எண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸ் ஜூனியரின் ஆதரவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும், துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டின் ஆதரவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகின.
எனினும் விசேட தேவையுடையோர், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிகாலை 5 மணி முதல் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.