தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும் , பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தையிட்டி விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.