Thursday, May 22, 2025
HomeMain NewsSri Lankaஜஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது..!

ஜஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) ஜஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான யுவதியிடமிருந்து 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த யுவதி நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இதற்கு முன்னரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments