Friday, May 23, 2025
HomeMain NewsTechnologyApple Watch Ultra 3 வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த சில தகவல்கள்..!

Apple Watch Ultra 3 வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த சில தகவல்கள்..!

Apple Watch Ultra 3 வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் 2023-இல் Apple Watch Ultra 2-ஐ அறிமுகப்படுத்தியது. அதையடுத்து பிளாக் டைட்டானியம் வகை வந்தது.

இப்போது, 2025-ல் Apple Watch Ultra 3 வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய 3 புதிய அம்சங்கள்:

1- உயர் இரத்த அழுத்தம் கண்டறியும் வசதி (Blood Pressure monitor)

Apple பல ஆண்டுகளாக ரத்த அழுத்த கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது. இதனால், Ultra 3 வாட்ச்-இல் முதன்முறையாக ஹைபர்டென்ஷனை (Hypertension) கண்டறியும் வசதி அறிமுகமாகலாம். நேரடியான ரீடிங்களைக் காட்டாது என்றாலும், ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களை பின்தொடர்ந்து எச்சரிக்கை தரும் என தெரிகிறது.

2- சாடிலைட் மெசேஜிங் (Satellite connectivity)

iPhone 14-ல் அறிமுகமான Satellite connectivity வசதி, முதன்முறையாக ஆப்பிள் வாட்ச்-இல் வர வாய்ப்புள்ளது. Ultra 3-இல் இம்மாதிரியான அவசர தேவைக்கான மெசேஜிங் வசதி Wi-Fi/சீமில்லாத இடங்களில் பயனர்களுக்கு பாதுகாப்பான தொடர்பை வழங்கும்.

3- 5G வசதி (5G connectivity)

Apple இப்போது 4G LTE வசதி கொண்ட வாட்ச்களை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் Ultra 3-இல் புதிய MediaTek 5G Recap modem மூலம் 5G-யை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்ப அம்சங்கள், Apple Watch Ultra 3-ஐ சுகாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முன்நோடியாக மாற்றும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments