“லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை லலித் குமார் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.