பிரித்தானியா, உத்தேச குடியேற்ற முறைமையைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையினை கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் என, பிரதமர் கெயர் ஸ்ராமர் (Keir Starmer) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட மாற்றங்களில், அனைத்து நுழைவு அனுமதி விண்ணப்பிப்போர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் ஆங்கில அறிவு பரிசோதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 முதல் 10 ஆண்டுகள் வரை விண்ணப்பங்களைப் பரிசோதிப்பதற்கான காலவரையறை நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வெளிநாட்டு பராமரிப்புப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பை மட்டுப்படுத்தவும் பிரதமர் விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செயல்பாடுகள், சட்டபூர்வமாக பிரித்தானியாவிற்குள் நுழைபவர்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதேவேளை, புகலிட அமைப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேலும் மாற்றங்களை வகுக்கும் என உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) தெரிவித்துள்ளார்.