Thursday, May 22, 2025
HomeLife Styleஉடல் நலனை மேம்படுத்தும் உணவு பழக்கங்கள்...!

உடல் நலனை மேம்படுத்தும் உணவு பழக்கங்கள்…!

இன்றைய அவசரமான நகர வாழ்க்கை முறைகளால், உண்பது மற்றும் உறங்குவது ஆகிய அத்தியாவசிய செயல்கள் கூட காலநேரப்படி அமையாமல் நேரம் தவறி அமைந்து விடுகிறது.

அதனால் தான் பல்வேறு நோய்களுக்கு மனித உடல் ஆளாகி நிற்கிறது. இந்த சீரற்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் உணவு முறைகளில் சீராக செயல்பட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் உணவு முறைகளை சீர்படுத்தி, வாழ்வில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் நலத்தை போனஸ் ஆக பெற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வகையில் உடல் நலனுக்கு ஏற்ற முக்கியமான குறிப்புகளை தீங்கு பார்க்கலாம்.

உடல் என்பது ஒருவகை எந்திரம் போன்று செயல்படுகிறது. அதற்கு எரிபொருளாக உணவு அவசியம். அந்த எரிபொருளை நமது உடல் உள்ளார்ந்த கடிகாரம் மூலம் நேர்த்தியாக அதற்கான பசியை உணரச் செய்கிறது.

அதனால் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் சரியான உணவு, சரியான நேரம், சரியான அளவு ஆகிய மூன்று அடிப்படை விஷயங்கள் அத்தியாவசியமானதாகும்.

சரியான உணவு என்பது ஆரோக்கியமான உணவு முறையின் அடிப்படையாக அமைவதாகும். அந்த வகையில் காய்கறி வகைகளை அதிகமாக உணவில் நாம் அனைவருமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தவறாமல் உட்கொள்வது அவசியம். அத்துடன் இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களையும் அவ்வப்பொழுது பருக வேண்டும்.

சித்திரை போன்ற வெயில் காலங்களில் செயற்கையான குளிர் பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

* காலை உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும். அந்த வகையில் நம்முடைய பாரம்பரிய உணவு, முழு தானிய உணவு ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவைப் பொறுத்தவரை கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை அடங்கிய உணவை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் காய்கறி, கீரைகள், பயிறு வகை, மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் உண்பதற்கான காலம் மதிய நேரமே.

* இரவு நேரத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளை குறைந்த அளவில் உட்கொள்வதே எப்பொழுதும் நன்மையை ஏற்படுத்தும்.

நம்முடைய இந்திய பாரம்பரிய முறைப்படி உணவு பழக்கம் என்பது மூன்று வேலைகளாக காலை, இரவு என அமைந்துள்ளது. அத்துடன் காலை, மதியம் மற்றும் மதியம், இரவு வேலைகளுக்கு இடையில் சிற்றுண்டிகளையும் தேவைக்கு ஏற்ப அளவாக உட்கொள்ளலாம்.

ஒவ்வொரு நேர உணவை உட்கொண்டு முடித்ததும் அடுத்த உணவுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளி அவசியம். எப்பொழுதுமே காலை உணவை உறங்கி எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உண்பதே நல்லது.

ஏனென்றால் இரவு சாப்பிட்டு முடித்தவுடன் நீண்ட நேரம் கழித்து காலை உணவு உண்பதால் அதை தாமதம் செய்வது கூடாது. அதனால் தான் அதை பிரேக் பாஸ்ட் அதாவது உண்ணா நோன்பை உடைப்பது என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

* காலை உணவு என்பது காலை 7 முதல் 9 மணிக்குள்ளாகவும்,

* மதிய உணவை அதிகபட்சமாக நண்பகல் 2 மணிக்குள்ளாகவும்,

* இரவு உணவை 8.30 மணிக்குள்ளாகவும் உண்பதே சிறந்தது.

இரவு உணவைப் பொறுத்தவரை உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே உண்பது நல்லது. அப்பொழுதுதான் தூக்கத்திற்கான ஹார்மோன் சரியாக வெளிப்பட்டு நல்ல தூக்கம் ஏற்படும்.

இரவில் மனித உடலினுடைய வளர்ச்சிதை மாற்றம் குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவின் அளவை அவசியம் இல்லாமல் குறைக்கக் கூடாது.

நாம் உண்பதில் ஒருவேளை உணவாவது காய்கறி, பழங்கள், தானியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments