Friday, May 23, 2025
HomeMain NewsSri Lankaயாழில் மகளுக்கு உணவில் விசம் கலந்த தந்தை...!

யாழில் மகளுக்கு உணவில் விசம் கலந்த தந்தை…!

யாழ்ப்பாணத்தில் தந்தையொருவர் அவரது 6 வயது மகளுக்கு உணவில் விசத்தை கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் – இளவாலை – உயரப்புலம் பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த தந்தை விசம் கலந்த உணவை சிறுமிக்கு வழங்க முற்பட்ட போது அவரது தாய் அதனை தடுத்துள்ளார்.

எனினும், சிறுமிக்கு விசம் கலந்த உணவு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது தாய் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தந்தை தலைமறைவாகியுள்ளதுடன், அவரைத் தேடும் நடவடிக்கையில் இளவாலை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments