Saturday, May 24, 2025
HomeMain NewsSri Lankaஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம்....!

ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம்….!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன், வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குக் காற்றின் தரச் சுட்டெண் 33 – 80க்கும் இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, குருநாகல், கண்டி, கேகாலை, காலி, புத்தளம், பதுளை, களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் உள்ள வேளைகளில், குறிப்பாகக் காலை 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் பகல் வேளையில் 3 மணி முதல் 4 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments