Thursday, May 22, 2025
HomeMain NewsSri Lankaவவுனியாவில் வழங்கப்பட்டது முள்ளிவாய்க்கால் கஞ்சி...!

வவுனியாவில் வழங்கப்பட்டது முள்ளிவாய்க்கால் கஞ்சி…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை கஞ்சி வாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், இன்று காலை 11 மணியளவில் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா – இலுப்பையடி பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments