Friday, May 23, 2025
HomeSportsஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு…!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த குழாமில் ஸ்டீவ் ஸ்மித் உப தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காயம் காரணமாக ஓய்விலிருந்த சகலதுறை வீரர் கேமரூன் கிரீன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாமில் Pat Cummins (capt), Scott Boland, Alex Carey, Cameron Green, Josh Hazlewood, Travis Head, Josh Inglis, Usman Khawaja, Sam Konstas, Matt Kuhnemann, Marnus Labuschagne, Nathan Lyon, Steven Smith, Mitchell Starc, Beau Webster ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி நிறைவடைந்ததும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய குழாமே பங்குபற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments