தமிழ் சினிமாவில் 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள படம் தக் லைஃப்.
இதில் கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜாஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் பாலிவுட் நடிகரான அலிபசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸை நெருங்கி வரும் நிலையில் படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க நடந்துள்ளது. தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி ரூ. 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.
அதேபோல் ஓடிடி வியாபாரத்தில் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.