பிரபலமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் விஷாலின் “ஆக்சன்” படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘ஜெகமே தந்திரம், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, கட்டா குஷ்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது சூரியுடன் இணைந்து ‘மாமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வருகிற மே 16-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சூரி குறித்து பேசியுள்ளார். அதாவது, “சூரி சாருடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமை. ஏனென்றால் அவர் மிகவும் நேர்மையான மனிதர். அவர் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை இருக்கிறது. அவர் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு, மரியாதை இருக்கிறது. அதனால் அவருடன் நடிப்பதில் பெருமை தான் எனக்கு” என்று தெரிவித்துள்ளார்.