கர்நாடகாவைச் சேர்ந்த, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குநரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் சுப்பண்ணா அய்யப்பன், மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மைசூருவில் மனைவியுடன் வசித்த வந்த அவர், மே 7-ஆம் காணாமல் போனதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் உள்ள சாய் ஆசிரமம் அருகே காவிரி ஆற்றில் அவர் சடலமாகக் கிடந்தார். அவரது ஸ்கூட்டரும் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டது.
அவரது மரணம் குறித்து ஸ்ரீரங்கப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மீன் வளர்ப்புப் புரட்சியின் முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்டு சுப்பண்ணாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.