Wednesday, May 21, 2025
HomeMain NewsOther Countryமலேசியாவில் கோர விபத்தில் 9 பேர் பலி

மலேசியாவில் கோர விபத்தில் 9 பேர் பலி

மலேசியாவின் பேராக், தெலுக் இந்தான், ஜாலாம் சுங்கை மானிக்கில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில், FRU எனப்படும் கலகத் தடுப்பு போலீஸார் 9 பேர் உயிரிழந்தனர்.

கற்களை ஏற்றி வந்த லாரியுடன் மோதியதில் ஏற்பட்ட அவ்விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்து தெலுக் இந்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவ்விபத்துக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் லாரி ஓட்டுநர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டார்.

எனினும், நடத்தப்பட்ட 7 சிறுநீர் பரிசோதனைகளிலும், அவர் போதைப்பொருள் எதுவும் உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதிய்ச் செய்யப்பட்டுள்ளது.,

பிற்பகல் 2.30 மணி தொடக்கம் சவப்பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன; இரவு 8 மணிக்கு அது நிறைவுப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மரணமடைந்த 9 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 44 வயது சார்ஜன் எஸ்.பெருமாளும் அடங்குவார் என பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

இவ்வேளையில், அச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

காயமடைந்தவர்களும் விரைவில் குணமடைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டவர், அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறும் அதிகாரிகளை பிரதமர் பணித்துள்ளார்.

இச்சம்பம் குறித்து மாமன்னரும் அதிர்ச்சியும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments