Wednesday, May 21, 2025
HomeCinemaலண்டன் அருங்காட்சியகத்தில் ராம் சரணுக்கு மெழுகு சிலை...!

லண்டன் அருங்காட்சியகத்தில் ராம் சரணுக்கு மெழுகு சிலை…!

பிரபலங்களின் உருவத்தை சிலையாக வடிவமைத்து லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் வைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்களின் உருவச் சிலைகளும் மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக தெலுங்கு நடிகர் ராம்சரணின் மெழுகு சிலையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு லண்டனில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

மெழுகு சிலைக்கு போஸ் கொடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் தனியாகவே தான் போஸ் கொடுப்பார்கள். ஆனால் நடிகர் ராம்சரண் தான் செல்லமாக வளர்க்கும் ரைம் என்கிற நாய்க்குட்டியை மடியில் அமர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார். அவரது நாய்க்குட்டியுடன் அவரது மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகு சிலையுடன் அதே போன்ற போஸில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாய்க் குட்டியையும் அமர வைத்தபடி போஸ் கொடுத்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments