கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி மலையில் தந்தையுடன் சாமி தரிசனம் செய்யச் சென்ற 15 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் விஷ்வா தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சாமி தரிசனம் முடித்து இறங்கியபோது 3வது மலையில் மயங்கி விழுந்துள்ளார்.
சிறுவனைடோலி மூலம் அடிவாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.