Friday, May 23, 2025
HomeMain NewsIndiaடிரம்ப் கூறிய கருத்துக்கு இந்தியா மறுப்பு...!

டிரம்ப் கூறிய கருத்துக்கு இந்தியா மறுப்பு…!

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,

“இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தா விட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்,

“ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments