தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் இராஜதந்திர பயணத்தைத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று (13) சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.
இதன்போது வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல்களில் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சவூதி அரேபியாவைத் தவிர, அமெரிக்க ஜனாதிபதி கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.