2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ஆம் திகதி தொடங்க உள்ளது.
இந்த போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் மற்றும் தென்னாப்பிரிக்கா குழாம் என்பன இன்று அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனுரான் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்
நாகையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2019ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 4 டெஸ்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.