Sunday, May 25, 2025
HomeMain NewsTechnologyஜூலையில் வெளியாகும் கேலக்ஸி Z ப்ளிப் 7

ஜூலையில் வெளியாகும் கேலக்ஸி Z ப்ளிப் 7

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 7 உடன் கேலக்ஸி Z போல்டு 7 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் கிளாம்ஷெல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை பார்ப்போம்.

கேலக்ஸி Z ப்ளிப் 7 குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மேம்பாட்டை கொண்டிருக்கும் என தெரிகிறது. இது சாதனத்தின் மேல் பாதியை உள்ளடக்கிய மிகவும் விரிவான, எட்ஜ்-டு-எட்ஜ் கவர் டிஸ்ப்ளேவுடன் வருவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் பெரிய கவர் டிஸ்ப்ளே பற்றிய விவரங்கள் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி கண்டறிந்துள்ளது.

இது தொடர்பான அனிமேஷன் கோப்புகள் கேலக்ஸி Z ப்ளிப் 5 , கேலக்ஸி Z ப்ளிப் 6 மற்றும் வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 ஆகியவற்றைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6-க்கான காட்சிகள் அவற்றின் தற்போதைய வடிவமைப்புகளுடன் பொருந்தினாலும், கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் அனிமேஷன் குறிப்பிடத்தக்க அளவு பெரிய கவர் டிஸ்ப்ளேவைக் குறிக்கிறது.

கேலக்ஸி Z ப்ளிப் 7-இல் தற்போதுள்ள வடிவமைப்பிற்கு பதிலாக, புதிய மாடலில் மோட்டோரோலா ரேசர் 50-ஐ ஒத்த இரட்டை கேமராக்களுக்கான கட்-அவுட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது.

வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 மாடல் 4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.8 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்பட்டது. ஆனால், கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல் 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.7 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இது 12 ஜிபி ரேம் உடன் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 2500 சிப்செட்டைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட இரட்டை கேமரா ஸ்லாட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் கொண்டு இருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 4,300mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments