ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் திகதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன.
ஜூன் 3 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் இருக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் இருப்பதாலும் இரு அணிகளை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மார்கோ ஜான்சன் , மார்க்ரம் , ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் , ஜேக்கப் பெத்தேல் , ஜோஸ் பட்லர் ஆகியோர் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.