Saturday, May 24, 2025
HomeCinemaஐசரி கணேஷின் மகள்- மருமகனுக்கு விருந்து வைக்கும் விஜய்

ஐசரி கணேஷின் மகள்- மருமகனுக்கு விருந்து வைக்கும் விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று விஜய் அறிவித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதன்பிறகு முழு அரசியல் பணிகளில் விஜய் ஈடுபட உள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

திருமணத்திற்கும், அதன்பின் நடைபெற்ற திருமண வரவேற்பிற்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இருந்தனர். நடிகை ஷாலினியும் பங்கேற்றார்.

திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர்.

அவருடைய கட்சி சார்பாக ஆதவ் அர்ஜூனா வந்திருந்தார்.

திருமண வரவேற்பில் 25,000 பேருக்கு மேல் கலந்து கொண்டதால் நகர கூட முடியாமல் அனைவரும் தவித்துள்ளனர்.

இதற்கிடையில் விஜயும் வந்தால் இன்னும் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தினால் தான் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது வீட்டில் ஒரு நாள் ஐசரி கணேஷின் மகள்- மருமகனுக்கு ஸ்பெஷல் விருந்து வைப்பதாக விஜய் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments