பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொத்மலை – கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த அவர், இந்தியாவிலிருந்து தரமற்ற பேருந்துகளே இறக்குமதி செய்யப்படுவதாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதேவேளை, கொத்மலை – கெரண்டி எல்ல பேருந்து விபத்தில் காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டிருந்த கொத்மலை பிராந்திய வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்துவதற்காக, அங்கு க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வைத்தியசாலையின் நோயாளர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் வசதியான சூழலை உருவாக்குவதற்கான செயற்பாடு இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.