வென்னப்புவ கடலில் நீராடச் சென்று காணாமல் போயுள்ள மூவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த கடலில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நேற்றைய தினம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அத்துடன், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போயுள்ள மூவரைத் தேடும் பணிகளை காவல்துறையினரும், காவல்துறை உயிர்காப்பு பிரிவினரும் முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, கல்கமுவ – பலுகடவல வாவியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளே சம்பவத்தில் உயிரிழந்ததாக கல்கமுவ மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோதே அந்த சிறுமிகள் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Missing, Drowned, Wennappuwa sea, Intense