அமெரிக்காவுக்கு, சவூதி அரேபியாவை விட வலுவானதொரு பங்காளி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாகவும் உறுதியளித்தார்.
சிறந்த வாய்ப்புடன் நாடு முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான டொனால் ட்ரம்பினது விஜயத்தின் முதல் நாளில் அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் 142 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்தநிலையில், ரியாத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கும் பயணமாகவுள்ளார்.