புதிய ஆராய்ச்சியின் படி, பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக கார்கள் மற்றும் இறைச்சி என்பன பெயரிடப்பட்டுள்ளன.
பிரான்சில் 15,000 பேரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி , ஆண்கள் போக்குவரத்து மற்றும் உணவில் இருந்து பெண்களை விட 26% அதிகமாக பூமியை வெப்பமாக்கும் மாசுபாட்டை வெளியிடுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது
வருமானம் மற்றும் கல்வி போன்ற சமூக பொருளாதார காரணிகளைக் கட்டுப்படுத்திய பிறகு இந்த இடைவெளி 18% ஆகக் குறைகிறது.
இறைச்சி சாப்பிடுவது மற்றும் கார்களை ஓட்டுவது, முதலானவை ஆண்கள் அதிக கலோரிகளை உட்கொள்வதையும் நீண்ட தூரம் பயணிப்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு மீதமுள்ள மாசுபாட்டில் உள்ள 6.5-9.5% வேறுபாட்டை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்வீடனில் நடந்த முந்தைய ஆராய்ச்சியில் பெண்களை விட ஆண்கள் 16% அதிக காலநிலை-வெப்பமூட்டும் உமிழ்வை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டிருந்தது